இன்று செவ்வாய்க்கிழமை காலை, Lachen இல் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 41 வயதுடைய ஒருவர் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து அதன் அடியில் சிக்கிக்கொண்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபரைக் இடிபாடுகளுக்குள் இருந்து காப்பாற்றும் முயற்சியில் lachen தீயணைப்புத் துறை மற்றும் pfaffikon தீயணைப்புத் துறையினர ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் அவசரகால சேவைகளின் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, ஹலிகொப்டர் மூலம் குறித்த நபர் கான்டோனுக்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துக்கான சரியான காரணம் ஆராயப்பட்டு வருகிறது
schwyz கன்டோனல் போலீசார், schwyz கன்டோனல் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து, தொழில்துறை விபத்துக்கான காரணத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
schwyz கன்டோனல் காவல்துறையைத் தவிர, schwyz தீயணைப்புப் படை, pfaffikon தீயணைப்புப் படை, மீட்பு சேவை, விமான மீட்பு சேவை, schwyz கன்டோனல் தொழிலாளர் ஆய்வாளர் மற்றும் பராமரிப்புக் குழு ஆகியவை பணியில் இருந்தன.
Source (c) :- Kantonal Polizei schwyz