கன்டோன் ஆர்காவில் இடம்பெற்ற ஒரு விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று திங்கட்கிழமை மதியம், 76 வயதான ஓய்வூதியம் பெறுபவர் ஆர்காவ் – கிரானிச்சனில் ஒரு ரயில்வே கிராசிங்கைக் கடக்கும்போது, அருகில் வந்த ரயிலில் அடிபட்டார்.
குறித்த பெண் சம்பவ இடத்திலையே பலியானார். இச்சம்பத்தை நேரில் கண்ட சாட்சிகளை கன்டோனல் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆதாரம்: ஆர்காவ் கன்டோனல் போலீஸ்
குறித்த சம்பவம் நேற்று 22 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கிரானிச்சனில் உள்ள லெவல் கிராசிங்கில் ஏற்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஓய்வூதியதாரர் ஒருவரே இச்சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.