ஷ்விஸ் கன்டோன் லாகனில் இடம்பெற்ற ஒரு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாழன் மதியம் இடம்பெற்றுள்ளது.
34 வயதான பெண்ணும் 62 வயது ஆணும் மதியம் 1:30 மணியளவில் வீதியைக்கடக்கு முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இருவர் மீதும் வாகனம் மோதியதில் 34 வயதான பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். 62 வயதான ஆண் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வாகனத்தின் ஓட்டுனர் 17 வயது நிரம்பியவர் எனவும் விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.