சொலுத்தூர்ன் கன்டோனில் ஜனவரி 15, 2024 திங்கட்கிழமை காலை அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்!
திங்கட்கிழமை, ஜனவரி 15, 2024 அன்று, காலை 5:45 அளவில், வொல்ப்வில் மில்ச்காஸ்ஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சொலுத்தூர்ன் கன்டோனல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், போலீசாரின் ரோந்து படையணி, உள்ளூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு சேவை உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 73 வயதான குடியிருப்பாளர் குறிப்பிடத்தக்க காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.