சுவிற்சர்லாந்தில் கொள்கலன்களில் ஆபிரிக்காவுக்கு கடத்தப்பட்ட 24 கார்கள்.! சுவிற்சர்லாந்தில் பாசல் (Basel) நகர எல்லையில் இருந்து ஆபிரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட இருந்த பல்வேறு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெடரல் அலுவலக சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (BAZG) ஊழியர்கள், கன்டெய்னர்களின் சுங்கச் சோதனையின் பேதே குறித்த பதிவு செய்யப்படாத பல கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான கார்கள் திருடப்பட்டவை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பாசல் பகுதியில் உள்ள கொள்கலன்களில் (containers ) BAZG ஊழியர்கள் பல்வேறு சுங்க சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே பல பதிவுசெய்யப்படாத கார்கள் இருந்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவற்றில் மேலும் பல கார்கள் திருடப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளமை சுங்க அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில் மொத்தம் 24 வாகனங்கள் திருடப்பட்டவை என தெரியவந்தது. கார்கள் ஒவ்வொன்றும் வெளிநாட்டில் திருடப்பட்டு ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இருந்தமையும் தெரியவந்துள்ளது.

வாகனங்கள் அனைத்தும் பொறுப்பான சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன, அவர்கள் அடுத்த சட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
Bildquelle: Bundesamt für Zoll und Grenzsicherheit BAZG