ஏரியின் நீர் மட்டம் அதிகரித்திருப்பதால் லுகானோ ஏரியின் ஒரு பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
லுகானோ ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தெற்கு ஏரியான லுகானோவில் வியாழக்கிழமை காலை முதல் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை முதல், தெற்கு டிசினோவில் ஒரு சதுர மீட்டருக்கு சுமார் 160 லிட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஏரி மட்டம் உயரும் போது, Melide பாலத்தை கடக்க முடியாது என லேக் லுகானோ ஷிப்பிங் கம்பெனியின்வணிக இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதனால்தான் வியாழன் அன்று Melide க்கு தெற்கே கப்பல் போக்குவரத்து தடைபட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை வரை மழையுடன் கூடிய காலநிலை நிலவலாம் எனவும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.