லுகானோவில் துப்பாக்கிச் சூடு : கொள்ளைர்களுடன் போலீசார்; மோதல்.! லுகானோ நகர மையத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை லுகார்னோ பகுதியில் உள்ள கைக்கடிகாரங்கள் விற்பனையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று தப்பிச்சென்றுள்ளனர்.
இதை அவதானித்த வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நகர காவல்துறையைச் சேர்ந்த போலீசார் இருவர் அவர்களை துரத்திப்பிடித்து அவர்களுடன் சண்டையிடவேண்டி ஏற்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டியேற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
(c) 20min.ch(c) 20min.ch
இதன்போது மூவர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய நான்காவது விரைவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
எனினும் இச்சம்பவத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கொள்ளைச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.