பேர்ன் மாநிலத்தில் பல குழுக்களிடையே மோதல் : சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
பேர்ன் மாநிலத்தின் வீல் (Biel) நகரில் உள்ள பிராடெரி (Braderie) திருவிழா நடந்து கொண்டிருந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை சுமார் 4:30 மணியளவில், வீல் நகரின் சென்ட்ரால் சாலையில் (Zentralstrasse) கடும் மோதல் ஏற்பட்டது.
மோதலில் ஒருவர் கீழே விழுந்து காயம்
போலீசார் தெரிவித்ததின்படி, ஆரம்ப கட்ட தகவல்களின் அடிப்படையில் பலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த மோதலின் போது, ஒருவரை சிலர் தாக்கியுள்ளனர். தாக்குதலால் அவர் கீழே விழுந்து காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு அவசர உதவிப் படைகள் வந்தபோது, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் தப்பியோடியுள்ளனர்.

போலீசார் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்
சம்பவம் தொடர்பாக பேர்ன் மாநில காவல்துறை உடனடியாக விசாரணை மற்றும் தேடுதல் பணிகளை ஆரம்பித்தது. இதன் விளைவாக, சிறிது நேரத்திலேயே சந்தேகத்துக்கிடையான இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பேர்ன் காவல்துறையின் பல ரோந்து குழுக்கள் (Patrouillen) மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் இணைந்து செயல்பட்டனர். காயமடைந்த நபருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.
பேர்ன் மாநில காவல்துறை சாட்சிகளை நாடுகின்றது
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக தற்போது பேர்ன் ஜூரா-சீலாந்த் (Berner Jura-Seeland) பிராந்திய அரசு வழக்கறிஞரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர், சம்பந்தப்பட்ட தகவல் உள்ளோர் சாட்சிகளாக முன்வருமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
@Kapo BE