புகலிடகோரிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம்.! நவம்பர் 9, 2024 சனிக்கிழமை காலை, 6:30 மணிக்குப் பிறகு St.Gallen கன்டோனில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத இரண்டு குற்றவாளிகள், St.Gallen இல் உள்ள Bichwilerstrasse இல் இரண்டு கார்களைத் தேடி, அதிலிருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்:
போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சந்தேக நபரை கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்டவர் லிபியாவைச் சேர்ந்த 26 வயது இளைஞன் எனவும் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

விசாரணையில், அவருக்கு உடந்தையாக இருந்தவர் அடையாளம் காணப்பட்டார். இரண்டாவது சந்தேக நபர், அல்ஜீரியாவைச் சேர்ந்த 30 வயதான புகலிடக் கோரிக்கையாளர், அவர் பின்னர் துர்காவ் மாகாணத்தில் உள்ள புகலிட மையத்தில் கைது செய்யப்பட்டார்.
St.Gallen அரசு வக்கீல் அலுவலகம் மூலம் இருவருக்கும் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டது. குடியேற்றச் சட்டத்தின் கீழ் மேலும் நடவடிக்கைகள் தேவையா என்பதை இடம்பெயர்வு அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
© Kantonspolizei St.Gallen