டிசினோவில் சட்டவிரோத விபசாரம் : சீனப்பெண் கைது டெசினோவில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம், இத்தாலியில் வசிக்கும் 62 வயதான சீனக் குடிமகன் மீது மற்றொரு சீனக் குடிமகளை லுகானோவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், அவளைச் சுரண்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சிற்றின்ப சேவைகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவை தேவையான அனுமதிகள் இல்லாமல் மற்றும் உரிமம் இல்லாத குடியிருப்பில் நடத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெசினோ கன்டோனல் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சட்டவிரோத விபச்சார கும்பல் பற்றிய விரிவான விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைக் கண்டுபிடித்தனர்.
அபார்ட்மெண்டில் தேடுதல் மேற்கொண்டபோதே அவரை தற்காலிகமாக கைது செய்திருந்தனர். அவள் பின்னர் விடுவிக்கப்பட்டாள். விபச்சாரத்தை ஊக்குவித்தல்இ சட்டவிரோத விபச்சாரத்தில் ஈடுபடுதல், வெளிநாட்டினர் மீதான கூட்டாட்சி சட்டத்தை மீறுதல் மற்றும் அனுமதியின்றி வெளிநாட்டினரை பணியமர்த்துதல் ஆகியவை குற்றச்சாட்டுகளில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.