Basel நகரில் குடியிருப்பு வீடு தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் ஜனவரி 1, 2023 அன்று, மாலை 4.30 மணிக்குப் பிறகு, Grenzacher-Promenad க்கு அருகில் உள்ள Eisenbahnweg பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தீ விபத்து சம்பவத்தின் போது எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் Basel நகரில் பற்றி எரிந்த குடியிருப்பு வீடு – வீடியோ இணைப்பு
வீட்டில் வசிப்பவர் தனது வீட்டின் அறை ஒன்றில் தீ பற்றுவதை அவதானித்துள்ளார். உடனடியாக அவசர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சிறிது நேரத்துக்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றவியல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தீயணைப்பு நடவடிக்கையின் போது பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்னர்களுக்காக பாதைகள் தற்காலிகமா மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.