சுவிஸ் பெண் கவிஞர் திருமதி ரூபா அன்ரன் அவர்கள் எழுதிய ” இயேசு அந்தாதி ” நூல் வெளியீடு எதிர்வரும் 15.12.2024 இல் இடம் பெறவிருக்கின்றது. கவிதாயினி ரூபா அன்ரன் அவர்கள் சிறப்புமிக்க பல கவிதைகளை நூலாகவும் இசைப்பாடலாகவும் வெளியீடு செய்து புகழ் பெற்றுள்ளார்.
புலம்பெயர் தேசத்தில் அந்தாதி இலக்கியங்கள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிவந்திருக்கின்றன. இவர் எழுதி திய யேசு அந்தாதி சிறந்த பத்தி இலக்கியமாக திகழும் என்பது எனது நம்பிக்கையாகும். கவிஞருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தமிழகத்தில் இருந்து சிறந்த இலக்கியப் பேச்சாளர்,முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். வாய்ப்புள்ளவர்கள் வருக ….
பதிவு :-Arunthavarajah Geneva