சுவிட்சர்லாந்துக்கு பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தேவை
சுவிட்சர்லாந்தில் 2030ஆம் ஆண்டுவாக்கில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2029 இல் மட்டுமே 130,000 பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அந்த காலியிடங்களை நிரப்ப போதுமான பணியாளர்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கமாட்டார்கள் என சர்வதேச நாணய நிதியமும், Raiffeisen வங்கியும் தெரிவித்துள்ளன.
எனவே அப்படி காலியான இடங்களை நிரப்ப சுவிட்சர்லாந்தில் ஆட்கள் இல்லையானால், சுமார் 200,000 பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில், சுமார் 114,000 பணியிடங்கள் காலியாக இருந்ததாக பெடரல் புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மருத்துவத்துறை நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் பெரும் பிரச்சினைகாணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.