சுவிட்சர்லாந்தில் இருந்து பாரிஸ் செல்லும் TGV ரயில்கள் ரத்து தென்கிழக்கு பிரான்சில் புயல் காரணமாக பாரிஸுக்கு பயணம் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தேசிய ரயில்வே அறிவித்துள்ளது.
லவுசான், ஜெனிவா மற்றும் பாரிஸ் இடையே TGV அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூரிச் மற்றும் பாசலில் இருந்து வரும் TGV ரயில்கள் பிற்பகலில் இருந்து திருப்பி விடப்பட்டுள்ளன.
தென்கிழக்கு நோக்கிய அதிவேக ரயில் போக்குவரத்து தடங்கலால் மொத்தம் 80,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக SNCF அறிவித்தது.

பாரிசுக்கும் Dijon க்கும் இடையே உள்ள ரயில் பாதைகளில் மரங்கள் வீழ்ந்துள்ளன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதேவேளை ரயில் சேவை தடைப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களில் காத்திருக்கின்றனர். சுமார் 80,000 பயணிகள் தாமதம் மற்றும் ரயில் ரத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வளவு நேரம் இடையூறு ஏற்படும் என்று தெரியவில்லை. இருப்பினும், சுத்தப்படுத்தும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.