2025 செப்டம்பர் மாத இறுதியில், சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 6,562,600 ஆக இருந்தன என்று நாட்டின் மத்திய அரசாங்க புள்ளிவிவர அலுவலகம் (Federal Statistical Office) தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் டந்த ஆண்டைவிட 0.9% அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதில் பயணிகள் கார்கள் (Passenger cars) சுமார் மூன்றில் மூன்றுபங்கை வகிக்கின்றன, மொத்தம் 4,829,500 வாகனங்கள், இது கடந்த ஆண்டைவிட 33,400 (0.7%) அதிகம்.
மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் அதிகரித்துவருகின்றன என்றாலும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களே இன்னும் பெரும்பான்மையாக உள்ளன. மொத்த வாகனங்களில்:
- 58.7% பெட்ரோல்,
- 24% டீசல்,
- 11.9% ஹைப்ரிட் (2024 இல் 9.6%),
- 5.2% மின்சாரம் (2024 இல் 4.2%) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கான்டன்களுக்கு (cantons) குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.
- சூக் (Zug) கான்டன் மின்சார வாகனங்களின் மிக உயர்ந்த விகிதத்துடன் (11.3%) முதலிடத்தில் உள்ளது.
- அதனை சூரிச் (Zurich) (6.6%) பின்தொடர்கிறது.
பிரஞ்சு மொழிப் பகுதிகளில்,
- வோட் (Vaud) (5.4%) முதலிடத்தில்,
- பின்னர் ப்ரிபூர்க் (Fribourg) (5%),
- வலெய்ஸ் (Valais) (4.3%),
- நூஷாத்தெல் (Neuchâtel) மற்றும் ஜுரா (Jura) (3.8%) வருகின்றன.
- ஜெனீவா (Geneva) 3.6% விகிதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்து ரயில்வே நாடாக அறியப்பட்டாலும், கார்கள் இன்னும் போக்குவரத்தில் முக்கிய ஆதிக்கம் செலுத்துகின்றன என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.