Zug மாகாணத்தில் மின்சாரக்கார்களின் பயன்பாடு அதிகரிப்பு சுவிட்சர்லாந்தில், Zug கன்டோனில் அதிகளவிலான மின்சாரக்கார்கள் பயன்படுத்தப்படுவதாக புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, Zug இல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களில் 8.2% முற்றிலும் மின்சாரத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தரவு ஆன்லைன் தளமான (Energie Reporter) எனர்ஜி ரிப்போர்ட்டர், (Energie Schweiz) எனர்ஜி ஸ்வீஸ் மற்றும் (Geoimpact show) ஜியோஇம்பாக்ட் ஆகியவற்றிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கார்கள் தொடர்பில் ஏனைய மாகாணங்களை பொறுத்தமட்டில் சற்று பின்தங்கிய நிலையே காணப்படுகிறது. சூரிச் 4.9% மற்றும் வாட் 4.1%. இதற்கிடையில், Uri (2.6%), Neuchâtel மற்றும் Glarus 2.8% போன்ற விகிதங்களில் காணப்படுகிறது.

சுவிட்சர்லாந்து முழுவதும், சாலைகளில் மின்சார கார்களின் சராசரி சதவீதம் 3.9% ஆக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், புதிய எலெக்ட்ரிக் கார் பதிவுகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து, வாகனக் குழுமத்தில் இ-கார்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், 24,821 மின்சார கார்கள் சுவிட்சர்லாந்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7% குறைந்துள்ளது.
தேவையில் இந்த சிறிய சரிவு இருந்தபோதிலும், சுவிட்சர்லாந்தில் அதிக மின்சாரக்கார்கள் பயன்பாட்டில் கன்டோன் சுக் முன்னிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.