வலைஸ் – செர்மாட் நகைக்கடையில் நபர்கள் அதிரடிக் கொள்ளை.!!
2025 ஜூலை 16-ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில், செர்மாட்டின் புகழ்பெற்ற பன்ஹோஃப்ஸ்டிராஸ்ஸில் உள்ள ஒரு நகைக்கடையில் அதிர்ச்சிகரமான கொள்ளை சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
மூன்று மர்ம நபர்கள் கடையின் காட்சி கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து, பல விலை உயர்ந்த கடிகாரங்களை திருடிச் சென்றுள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் டாஷ் திசையை நோக்கி தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் கருப்பு உடை அணிந்திருந்தனர்.

வலைஸ்மாநில காவல்துறை, இந்நிகழ்வைச் சுற்றியுள்ள விசாரணையில் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது. சந்தேக நபர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
👉 நீங்கள் இதைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், தயங்காமல் வலைஸ் காவல்துறையுடன் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
@antonspolizei Wallis