சுவிஸில் 7000 க்கும் அதிகமானவர்களது அபராத தொகையை திருப்பி செலுத்திய போலீசார் கன்டோன் பேர்ன்னில் தவறான முறையில் அதிவேக கமராக்களால் பாதிப்படைந்த 7000 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு அறவிடப்பட்ட அபராத தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக பேர்ன் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த ஆண்டு 2023, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இடம்பெற்றுள்ளது. புதிய ரேடார் கருவிகளின் மென்பொருளின் ப்ரோகிராமிங்கில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கடந்த நவம்பர் மாதம் போலீசார் தெரிவித்திருந்தனர்.
தற்போது அந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புதிய தகவல்களின்படி, சுமார் 7,300 ஓட்டுனர்களுக்கு கொடுப்பனவுகளை திருப்பிச் செலுத்த வேண்டும்.
எனினும் இதுவரை 7,231 பேருக்கு பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள வழக்குகளில், கணக்கு விவரங்கள் தொடர்பான பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.