சுவிஸ் சென்ட்காலன் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை சென்ட்காலன் கன்டோனில் சில பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்ட்கேலன் அசோசியேஷன் ஆஃப் எலிமெண்டரி ஸ்கூல் அதிகாரிகளின் கூற்றுப்படி, 83 சதவீத பள்ளி அதிகாரிகள், ஆசிரியர்களின் பற்றாக்குறையை 2023 இலையுதிர் காலத்தில் மிகக்கடுமையாக எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களின் பற்றாக்குறை என்பது பள்ளி அதிகாரிகளுக்கு எப்போதும் அதிகரித்து வரும் நீண்ட கால சவாலாக உள்ளது.
2021ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் கணக்கெடுப்பில், 43 சதவீதமானவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையை கவலைக்கிடமானதாக விவரித்துள்ளனர். மேலும் இந்த விகிதம் இன்றுவரை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அனைத்து பணியிடங்களையும் நிரப்ப,, பள்ளி அதிகாரிகள் அதிகளவில் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் அழைத்து வருவதாகவும், கற்பித்தல் தகுதி இல்லாத மாணவர்களையோ அல்லது ஆட்களையோ பணியில் அமர்த்துவதாகவும் கூறுகின்றனர்.
எனவே தகுவாய்ந்த ஆசிரியர்களுக்கான அழைப்பினையும் விடுத்துள்ளனர். இருப்பினும்இ ஆசிரியர்களின் பற்றாக்குறை விடயத்திற்கு தீர்வு காணும் முயற்சி கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.