சுவிட்சர்லாந்தில் பகலிலும் வாகனங்களில் மின்விளக்கு எரியவேண்டும் ஏன்.? – சுவாரசிய தகவல்-3 சுவிட்சர்லாந்தில் பகலில் மின்விளக்குகளை எரிய வைத்து வாகனம் ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Via Sicura எனப்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான விதிகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக, ஜனவரி 1, 2014 அன்று இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
சுவிட்சர்லாந்தில் பகலிலும் வாகனங்களில் மின்விளக்கு எரியவேண்டும் ஏன் தெரியுமா.?
இச்சட்டமானது “விளக்குகள் விதி” சுவிஸ் ஃபெடரல் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் 41 வது பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சட்ட விதிகளானது மோட்டார் சைக்கிள்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கார்களில் முன் பக்கம் இரண்டு செட் விளக்குகள் உள்ளன: வழக்கமான ஹெட்லைட்கள் மற்றும் இயங்கும் விளக்குகள் உள்ளன. சுவிஸ் TCS படி, உங்கள் காரில் ரன்னிங் லைட்டுகள் இருந்தால், பகல் நேரங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். அவ்வாறு இல்லையென்றால், உங்கள் வழக்கமான ஹெட்லைட்களை டிப் செய்யப்பட்ட நிலையில் பயன்படுத்த வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் பகலிலும் வாகனங்களில் மின்விளக்கு எரியவேண்டும் ஏன் தெரியுமா.?
பகலில் விளக்குகளை அணைத்துவிட்டு சுவிஸ் சாலைகளில் பிடிபட்டவர்களுக்கு CHF 40 -அபராதம் விதிக்கப்படுகிறது. அண்டை நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் பகல்நேர விளக்கு விதிகள் கடுமையாக உள்ளன.
பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில், பார்வை குறைவாக இருந்தால் பகலில் விளக்குகள் தேவை. ஜேர்மனியில், மூடுபனி, பனி அல்லது மழை போன்ற சந்தர்ப்பங்களில் பார்வையில் குறைபாடுகள் இருப்பின் பகல் நேரங்களில் ஹெட்லைட்களைப் பயன்படுத்த வேண்டும்.
இத்தாலி சுவிட்சர்லாந்திற்கு அருகில் உள்ள ஒரு நாடு. அங்கு நகரங்களுக்கு வெளியே வாகனம் ஓட்டும்போதும் பார்வை குறைவாக இருக்கும் போது பகலில் விளக்குகள் தேவைப்படுகின்றன.
சுவிட்சர்லாந்தில் பகலிலும் வாகனங்களில் மின்விளக்கு எரியவேண்டும் ஏன் தெரியுமா.?
ஒரு பொது விதியாக, எப்போதும் உங்கள் பிரதான விளக்குகளை எரிய வைத்து வாகனம் ஓட்டுவது உங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றும் என தெரிவிக்கப்படுகிறது.
முக்கியமாக ஃபின்லாந்து, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் தரவுகளைப் பயன்படுத்தி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது., அந்த ஆய்வின் முடிவில் பகலில் விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை செலுத்துவதனால் 24.6% பகல்நேர விபத்து, இறப்புகளைத் தடுக்கும் என்று மதிப்பிடுகிறது.
இந்த தகவல் சுவிற்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கலாம். ஆனால் ஏனைய நாடுகளில் வசிப்பவர்களுக்கும் அல்லது சுவிற்சர்லாந்துக்கு வருவதற்கு ஆசைப்படும் அல்லது காத்திருப்பவர்களுக்கு ஒரு புதிய தகவலாகவே இருக்கும்.
இது போன்ற சுவிற்சர்லாந்து பற்றிய மேலும் சுவாரசியமான தகவல்கள் செய்திகளை தினமும் அறிந்துகொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள். நன்றி.