சுவிட்சர்லாந்தில் அரங்கம் அதிர்ந்த அரிச்சந்திர மயான காண்டம்.! ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்பு கழகம் பெருமையுடன் நடாத்திய ஈழத்தின் ஒப்பற்ற கலைஞரான விவி வைரமுத்து அவர்களுடைய நூற்றாண்டு விழா சுவிட்சர்லாந்தின் பேர் நகரில் கடந்த 29ம் திகதி வெகு கோலாகலமாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பெருந்திரளான கலைப்பெருமக்கள் கலந்துகொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. பகல் 12 மணிக்கு பின்னராக ஆரம்பமான நிகழ்வுகள் இரவு 10 மணி வரை தொய்வின்றி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தமிழ்தாய் வாழ்த்தோடு ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்து வெளிநாட்டவர்களால் பாடப்பட்டமை அனைவரையும் வியப்பில் ஆழத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து கலைஞர் விவி.வைரமுத்து ஐயாவுக்கான வணக்க நிகழ்வோடு மேலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக மயானகாண்டம் நாடகம் அனைவரினதும் பாராட்டை பெற்றிருந்தது.
அதில் அரிச்சந்திரனாக மயிலையூர்இந்திரனும், சந்திரமதியாக நடிகமணி ஐயாவின் பேத்தி சுகிதா அவர்களும் நடித்திருந்து தமது தமது நடிப்புத்திறமையால் காண்பவர்களை கண்கலங்க வைத்திருந்தனர். மேலும் விசுவாமித்திரரின் நடிப்பும் போற்றுதலுக்கு உள்ளாகியிருந்தது.

அது மாத்திரம் இன்றி கலைவளரி இரமணணின் பண்டாவன்னியன் நாட்டுக்கூத்தும் இடம்பெற்று பலரது பாராட்டுக்களை தட்டிச்சென்றது. மேலும் நாட்டியமணி ஸ்ரீமதி வாணிசர்மா அவர்களின் மாணவிகளின்பரதநாட்டியம், கிராமிய நடனம், ஈழத்துபாடல் என நிகழ்வுகள் களைகட்டியிருந்தது.
முக்கிய நிகழ்வாக சிலம்பம் சுற்றும் நிகழ்வும் மேடையில் அரங்கேற்றப்பட்டவை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்திருந்தது. மறைக்கப்பட்டு மறக்கப்பட்டு வரும் சிலம்பம் கலைக்கு மறுவாழ்வு கொடுக்கும் முகமாக ஐரோப்பிய நாட்டில் இப்படியொரு நிகழ்வு பாராட்டத்தக்க நிகழ்வாகவே பார்க்கப்பட்டுவருகின்றது.

உண்மையில் அவ்வாறான ஒரு கலையை ஐரோப்பிய இளம் மாணவர்களுக்கு கடத்துபரை பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும் கவிஅரங்கம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. பாண்டித்தியம் பெற்ற நான்கு சிறப்பு கவிஞர்களால் பொழியப்பட்ட கவியுரைகள் சிறப்பு.
குறித்த நிகழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை சளைக்காமல் நின்று மேடை அரங்கில் அறிப்பாற்றிய ஊடகவியளாளர் கனரவியின் பங்கு பாராட்டுதற்குரியது.
தொடர்புடைய செய்தி :- சுவிசில் இடம்பெற இருக்கும் வி.வி.வைரமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா
இந்நிகழ்வுகள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். புலம்பெயர் தேசத்தில் ஒரு கலைஞருக்கான பாராட்டு விழாவில் இத்தனை நிகழ்வுகளை உள்ள புகுத்தி மக்கள் மனதை கவர்ந்திழுத்த பெருமை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வைகுந்தனையே சாரும்.
மேலும் இந்நிகழ்வுக்கு பல எழுத்தளார்கள் ஊடகவியளாகர்கள் என பல்வேறு பட்ட கலைஞர்களும் பங்குபற்றியிருந்ததோடு மேடையில் கலைஞர்களுக்காக கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வுகள் தொடர்பான மேலதிக காணொளிகளை காண எமது SwissTamilTv யுரிப் சானலை பார்க்கவும்.