சுவிட்சர்லாந்தில் பிரமாண்டமாக இடம்பெற்ற “Vivaha 2024” நிகழ்வு சுவிட்சர்லாந்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாபெரும் தமிழர் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. “விவாகா” என்று அழைக்கப்படும் குறித்த நிகழ்வு நான்காவது தடவையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் வர்த்தகர்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணையும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.
ஒப்ரிங்கனில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சுவிசின் புதிய மற்றும் முன்ணனி வர்த்தகர்கள் தங்கள் வியாபார அங்காடிகளை அமைத்து தமது புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியிருந்தனர்.
பெருந்திரளான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.