சுவிற்சர்லாந்தில் வன்னியூர் செந்தூரன் இன் ஈழத் தமிழர் வரலாறு, நூல் அறிமுகம்
சுவிஸ் தமிழர் ஆவணக் காப்பகத்தின் ஒழுங்கமைப்பில் 21-09-2025 ஞயிற்றுக்கிழமை பாசல், மாநிலத்தில் இடம்பெற்ற வன்னியூர் செந்தூரன் இன் ஈழத்தமிழர் வரலாறு நூல் அறிமுக நிகழ்வில் நூலிற்கான அறிமுக உரையினை பல்துறைக் கலைஞர் கவிஞர் இணுவையூர் மயூரன் ஆற்றினார்.
இந்நூல் வரலாற்றுத் தேடலை ஏற்படுத்தவல்லது என அறிமுகவுரையில் வலியுறுத்திய மயூரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இது போன்ற நூல்கள் படைக்கப்பட வேண்டியது அவசியம். தமிழரிடம் உள்ள ஆவணப் படுத்தலின் பற்றாக்குறையை போக்கவல்லதாக இது போன்ற நூல்களின் வரவு இருக்குமெனவும் இந்த நூலில் கல்வெட்டுக்களின் ஒளிப்படங்கள் பதிவாக்கப்பட்டது சிறப்பானது எனவும், செந்தூரனின் பணி தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
நூலிற்கான மதிப்பீட்டுரையை ஆற்றிய ஊடகவியலாளர் கனகரலி வரலாற்ரை ஆய்வு செய்து சமகாலத்தில் இந்நூலைப் படைத்திருக்கும் செந்தூரனின் செயற்பாடு பரராட்டுக்குரியதாகும். கடற்கோளால் உடைந்து திக்குத்திக்கான குமரிக் கண்டம் தொடக்கம் அடங்காப்பற்று வரை தமிழ்ரையும் தமிழையும் ஆய்வுக்குட்படுத்தி தமிழிலக்கியத்தின் துணையோடு இந்நூல் பாகம் 1 ஆகத் தரப்பட்டுள்ளது. நூலாசிரியர் செந்தூரனின் முயற்சி பாராட்டுக்குரியதே!
எனினும் நூலில் கூறியது கூறலைத் தவிர்ப்பதும் தரப்பட்டுள்ள கல்வெட்டின் ஒளிப்படங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது பற்றியும் மேலும் சான்றுகளுடன் ஆழமாக ஆய்வு செய்து அடுத்தடுத்த பாகங்களை காத்திரமாக செந்தூரன் தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதுடன் முன்னைய வரலாற்றில் களப்பணி அவர்களின் படைப்புகள் பற்றியும் எடுத்துக் காட்டி யிருந்தார். ஈழத்தமிழரை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து தடைகள் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து நேர்மையான ஆவணப் படுத்தல் மிக மிக அவசியமெனயும் தனதுரையில் கனகரவி வலியுறுத்தினார்.
சுவிஸ் தமிழர் ஆவணக்காப்பகத்தின் நிறுவனர் மகாலிங்கம் முருகனின் தலைமையில் இடம் பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் விழாச்சுடரேற்றல். தியாக தீபம் திலீபனிற்கான வணக்க நிகழ்வு, அகவணக்கம் மற்றும் திலீபனின் நினைவு வணக்கம் பாடல்களை செல்வி பிரித்திகா, செல்வன் ரக்சன் ஆகியோர் பாடினார்கள்.
தொடர்ந்து நூலின் முதல் பிரதியை சிவஶ்ரீ சந்தான கிருஸ்ணக்குருக்கள் (பாசல் அருள் மிகு இந்து ஆலயம்) பெற்றுக் கொண்டார், சிறப்புப்பிரதியை திரு. செல்வராசா கண்ணதாசன் திருமதி கண்ணதாசன் மதுராகினியும் திரு. மரியஞானசீலனும் பெற்றுக்கொண்டார். அத்துடன் கலந்து, கொண்ட ஆர்வலர்களும் ஆர்வமாக நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை இந்த நிகழ்வில் சுவிஸ் தமிழர் ஆவணக்காப்பகம்., தாம் ஆவணப் படுத்தி வைத்துள்ள பொருட்களின் காட்சிகளையும் காணொளியூடாக காட்சிப்படுத்தினர். தமது எதிர்காலப் பணிகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் மக்களின் ஒத்துழைப்பையும் வேண்டியிருந்தார்கள்.
நிகழ்வை இளையோர்களான செல்வி மகிழினி, செல்வி பிரித்திகா ஆகியோர் சிறப்பாகத் தொகுத்து வழங்கி எதிர்காலத்தில் சிறந்த அறிவிப்பாளர்களாக வருவதற்கான எண்ணத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தனர். நன்றியுரையை கவிஞரும் ஆவணக்காப்பகத்தின் அங்கத்தவருமான வேலுப்பிள்ளை செல்வயோகநாதன் ஆற்றினார்.
தகவல்:- சுவிஸ் தமிழ் ஊடக மையம்