சுவிட்சர்லாந்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடைமுறை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சளி காய்ச்சலில் இருந்து மாணவர் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
ஆபத்துக்கள் இல்லை என்ற போதிலும் தடுப்பூசி ஏற்றி தம்மை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் ஏனையவர்களுக்கு நோய் தொற்று பரவுவதனை தடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று தொடர்பில் பின்பற்றப்பட்ட அணுகுமுறைகள் சளி காய்ச்சல் தொடர்பிலும் பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சளி காய்ச்சல் தொடர்பிலான தடுப்பூசி ஏற்றுக் கொள்வதில் நாட்டம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.