கன்டோன் சென்ட்காலன் உஸ்வில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் திருட முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் 1 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு நபர்கள் ஒரு காருக்குள் அதிக நேரமாக தேடிக்கொண்டிப்பதாக கன்டோனல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது இருவரும் அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றிருந்தனர். நீண்ட நேரமாக போலீசார் தேடுதல் நடாத்திய போது இறுதியாக உஸ்வில் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதான துனிசிய மற்றும் 27 வயதான மொராக்கோ நாட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.