பாசலில் குடும்பத்துடன் நடந்து சென்றவர் மீது துப்பாக்கிசசூடு.!!
பாசலில் (Basel) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு அதிர்ச்சிகரமான துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. 47 வயதான ஒரு Swiss நபர், அவரது குடும்பத்துடன் நடைபயணமாக சென்றபோது, அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவம் காலை 5 மணிக்கு அருகில் உள்ள St. Johanns-Ring பகுதியில் நடந்தது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் விழிப்புடன் இருந்ததால், உடனடியாக Basel-Stadt மீட்பு மருத்துவ குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். சம்பவத்தை தொடர்ந்து Basel-Stadt மாநில காவல்துறை விரைந்து விசாரணை மற்றும் குற்றவாளியை தேடும் பணிகளை ஆரம்பித்திருந்தாலும், தற்போது வரை குற்றவாளி பிடிபடவில்லை.
மாநிலக் குற்றவியல் விசாரணை பிரிவின் ஆரம்பகட்ட தகவலின்படி, குற்றவாளி துப்பாக்கி வைத்து தாக்கியதும், ஒரு இருண்ட நிற E-Trottinett-ல் (கிளிங்கல்பேர்க் வீதி) Klingelbergstrasse திசையில் தப்பிச் சென்றுள்ளார். குற்றத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலை பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது தற்போது தீவிர விசாரணையில் உள்ளது.

காவல்துறையினர் சந்தேகத்தின் கீழ் ஒருவரை தேடி வருகின்றனர்: அவருடைய வயது 25 முதல் 35 ஆக இருக்கக்கூடும், நடுத்தர நீளமான இருண்ட பழுப்பு நிற முடி மற்றும் குறுகிய தாடியுடன் இருப்பவர் எனவும் அவர் வெள்ளை டி-ஷர்ட், கருப்பு ஜெர்சி பாணி கால்சட்டை, கருப்பு ஷூ, மற்றும் கருப்பு பேஸ்-கேப் அணிந்திருந்தார். சம்பவத்தின் போது, அவர் ஒரு இருண்ட நிற மின் ஸ்கூட்டரில் பயணித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், Basel-Stadt மாநில குற்றப்பிரிவிற்கு 061 267 71 11 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் Basel நகர மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
@Kapo BL