சுவிட்சர்லாந்தில் துயரச்சம்பவம் – 2 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செயிண்ட்.காலன் (St.Gallen) மாநிலத்தின் நெக்கர்டால் (Neckertal) பகுதியில் உள்ள டோகன்புர்க் (Toggenburg) நகரில், 2 வயது சிறுவன் ஒருவர் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த சிறிய நீச்சல் குளத்தில் (piscinetta) தவறுதலாக விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச்சம்பவம் புதன்கிழமை மாலை நிகழ்ந்ததாக போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், குழந்தை யாராலும் கவனிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் நீரில் விழுந்ததை பின்னர் குடும்பத்தினர் கவனித்து உடனடியாக அவனை மீட்டனர்.

அவசர உதவி சேவை குழுவினர் உடனடியாக உயிர் காப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்ததாக போலீஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, சிறிய குழந்தைகள் நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும்போது எப்போதும் கண்காணிப்பு அவசியம் என அதிகாரிகள் பெற்றோர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
@Kapo SG