சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற இன்றைய விபத்து செய்திகளின் தொகுப்பு.! சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களிலும் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அது தொடர்பான சில தொகுப்புகள் ஒரே பார்வையில்…
லுசேர்ன் நரிகல் இடம்பெற்ற பயங்கர விபத்து.!!
லுசேர்ன் நகரில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று புதன்கிழமை மதியம் 1:15 மணிக்குப் பிறகு இடம்பெற்றுள்ளது. இதில் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிராவுண்டன் N28 நெடுஞ்சாலையில் விபத்து : முதியவர் காயம்.! கன்டோன் கிராவுந்தனில் நேற்று புதன்கிழமை N28 தேசிய சாலையில் காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின் போர் 78 வயதான வாகன ஓட்டுனர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று காலை 11:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
Image Source (c) :- Graubunden Cantonal Police
51 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற டிரக் மீது நேருக்கு நேர் மோதியதாலையே 78 வயது ஓட்டுனருடைய கார் விபத்துக்குள்ளானது.
காயங்களுக்கு உள்ளானவர் அவசர மருத்து சேவைகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதோடு, குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பில் கிராவுண்டன் கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஆர்காவ் கன்டோனில் பேரூந்துடன் மோதிய கார் – ஓட்டுனர் உரிமம் பறிமுதல்
ஆர்காவ் கன்டோனில் பயணிகள் பேரூந்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் ஜனவரி 10, 2024 அன்று மதியம், Spreitenbach இல் Industriestrasse இல் உள்ள ரவுண்டானாவில் RVBW பேருந்து ஒன்று சென்றது.
பட ஆதாரம்: ஆர்காவ் கன்டோனல் போலீஸ்
பேருந்து ஏறக்குறைய முழுவதுமாக ரவுண்டானாவில் வந்தபோது, சாம்பல் நிற AUDI ஒன்று ரவுண்டானாவில் வந்து பேருந்தின் பக்கவாட்டில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பயணிகள் இன்றி பேருந்து சென்று கொண்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வாகனங்களுக்கும் பல ஆயிரம் பிராங்குகள் மதிப்பிலான பொருள் சேதம் ஏற்பட்டது.
விபத்தினை ஏற்படுத்திய 83 வயதான டிரைவரால் விபத்து ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க முடியவில்லை.
கன்டோனல் போலீசார் தமது விசாரணைகளை தொடர்ந்து 83 வயது ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டது.
சூரிச்சில் கட்டுமான ரயில் விபத்து : இருவர் படுகாயம்
சூரிச் நகரில் நேற்று புதன் கிழமை இரவு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுனர் இல்லாத கட்டுமான ரயில் ஒன்று தானாக நகர்ந்து சென்று அங்கு ரயில் பாதை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது மோதியுள்ளது.
Image Source:- சூரிச் கன்டோனல் போலீஸ்
இவ்விபத்தில் 31 மற்றும் 42 வயதுடைய இருவர் படுகாயமடைந்து அவசர வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும் விபத்தின் போது கட்டுமான வாகனங்கள் பல லட்சம் பிராங்குகளுக்கு பொருள் சேதத்தை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.