துர்காவ் கன்டோனில் செவ்வாய்கிழமை Warth தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்தனர். அவசர சேவை மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-
மாலை 5:30 மணிக்கு சற்று முன், 62 வயது ஓட்டுநர் ஒருவர் “இம் ரோர்” என்ற கன்டோனல் சாலையில் Warth நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போதே எதிரே வந்த 60 வயதுடைய சாரதியின் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 62 வயதுடையவர் மிதமான காயம் அடைந்துள்ளதுடன், 60 வயதுடையவர் லேசான காயமடைந்துள்ளார். அவசர சேவை மூலம் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. வாகனங்கள் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் அளவுக்கு சேதம் அடைந்தன.
விபத்து பதிவு செய்யப்படும்போது பாதையின் பாதிக்கப்பட்ட பகுதி சுமார் இரண்டு மணி நேரம் மூட வேண்டியிருந்தது. Frauenfeld மற்றும் Thur-Seebach தீயணைப்புத் துறையினர் போக்குவரத்தை வேறு பாதைகளுக்கு திருப்பி விடும் பணியை மேற்கொண்டிருந்தனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.