சுவிட்சர்லாந்தில் தெரிவுசெய்யப்பட்ட உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகள்.!! சுவிஸ் மருத்துவமனைகள் மூன்று உலகின் சிறந்த மருத்துவமனைகளில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நியூஸ் வீக் என்ற அமெரிக்க பத்திரிகை மற்றும் உலகளாவிய தரவு நிறுவனமான ஸ்டேடிஸ்டா நடத்திய 250 மருத்துவ மையங்களின் புதிய சர்வதேச தரவரிசையில், மூன்று சுவிஸ் பல்கலைக்கழக மருத்துவமனைகள் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை 12 வது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து 14 வது இடத்தில் லொசானில் உள்ள Vaud’s பல்கலைக்கழக மருத்துவமனை (CHUV) மற்றும் 15 வது இடத்தில் Basel’s பல்கலைக்கழக மருத்துவமனை உள்ளது.
நோயாளி பராமரிப்பு, புதிய சிகிச்சைகள், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அதன் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டமை குறிப்பிடத்தக்கது.