சுவிட்சர்லாந்து சாக்லெட் தொழிற்சாலையில் நடிகை தமன்னா.!! சமீபத்தில் இந்திய நடிகையான தமன்னா நடித்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர் இரண்டுமே பெரும் வெற்றியை பெற்ற நிலையில், விடுமுறைக்காக அவர் சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தார்.
அவர் சுவிட்சர்லாந்தின் சொக்லேட் தொழிற்சாலை ஒன்றில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில், தற்போது சுவிட்சர்லாந்திலிருந்து புறப்படும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தைவிட்டு வர மனதில்லை..
தான் மனதில் இன்னமும் சுவிட்சர்லாந்திலேயே இருப்பதுபோல் உணர்வதாகவும், சுவிட்சர்லாந்தை விட்டு வர மனமேயில்லை என்றும் கூறியுள்ள தமன்னா, சொக்லேட்டும் சீஸும், அழகிய மலைகளைக் காணும் காட்சிகளுமாக விடுமுறை அருமையாக இருந்தததாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த நல்ல அனுபவத்தைக் கொடுத்த சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளார் தமன்னா.