சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பிரமாண்ட தமிழர் நிகழ்வு Beat Your Heart 2023 இந்த ஆண்டின் Beat Your Heart கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெற்றிருந்தது.
பாட்டு நடனம் இசை என்று அரங்கம் நிரம்பி வழியும் இளைஞர் பட்டாளத்துடன் ஆரவாரமாக ஆரம்பமான இந்த நிகழ்வில் பல புலம்பெயர் கலைஞர்களும் கலந்துகொண்டு தமது கலை மீதான ஆர்வத்தினை காட்டியிருந்தார்கள்.
Beat Your Heart 2023
இந்நிகழ்வு வெறும் நடனப்போட்டி மட்டுமல்லாமல் இளைஞர் யுவதிகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதாற்கான மிகப்பிரமாண்டமான மேடையாக காணப்பட்டது.
அக்டோபர் 14 ம் திகதி இடம்பெற்ற குறித்த நிகழ்வு 10 வது ஆண்டினையும் கடந்து வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது என்றால் சுவிட்சர்லாந்து கலைஞர்கள் இந்த நிகழ்வின் மீதும். ஏற்பாட்டாளர்கள் மீதும் வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கையே காரணமாக இருந்தது எனலாம்.
வேறு எந்த நிகழ்வுகளைப்போல் இல்லாமல் நேர்த்தியாக, நேர்மையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் புலம்பெயர் தேசங்களிலும் இருந்து கலைஞர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
பரதநாட்டிய கலைஞர்களுக்காகவும் Bartham Fusion என்ற நிகழ்வு மூலம் இந்த மேடை இவ்வாண்டு களம் அமைத்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பங்குபற்றிய கலைஞர்கள் நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு பரிசுகளும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்கள்.
பெயருக்கு ஏற்றால் போல இளைஞர்களின் இதயத்துடிப்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தமை நேரில் சென்று பார்த்த எவரும் மறந்துவிட முடியாது. முழுக்க முழுக்க இளைஞர் மற்றும் யுவதிகளால் அரங்கம் நிரம்பி வழிந்தமை இவ்விழாவின் வெற்றிக்கான சான்றாகவே பார்க்கப்படுகிறது.
SwissTamil24 ஊடகம் சார்பில் இவ்விழா ஒருங்கிணைப்பாளர் சசி மற்றும் குழுவினருக்கு வாழ்த்தக்கள்.