சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரில் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாபெரும் புத்தக கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
சுவிசில் இரண்டாவது தடவையாக இடம்பெறும் இந்த புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையில் 500 மேற்பட்ட தலைப்புகளில் தமிழ் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஈழம், புகலிடம், அரசியல், சமூகம், சிறுவர் என பல்வேறு வகையான புத்தகங்களையும் குறிப்பிட்ட நிகழ்வில் காணமுடிந்தது.
காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தார்கள்.
வாசிப்பை நேசிக்கும் பலரும் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச்சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
பல கலந்துரையாடல்கள் நூல் வெளியீடு என ஒரு பண்பாட்டு நிகழ்வாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிசில் பல்வேறு மாகாணங்களிலும் இருந்து தமிழ் உறவுகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வு பௌசர் அவர்களின் ஏற்பாட்டிலும் சண்தவராசா, பொலிகை ஜெயா, ரவி, நிமலதாஸ், செல்வம் மதிவதனி, அருந்தவராஐh மற்றும் சஐயந்தன் ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.