சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் புத்திசாலி நாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கல்வித் தளமான TutorSpace மேற்கொண்ட புதிய ஆய்வின்படி, சுவிட்சர்லாந்து மிகவும் புத்திசாலித்தனமான ஐரோப்பிய நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பு 44 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் குறித்த நிறுவனம் மக்களின் பொது அறிவைப் பற்றி வினாவிடை செய்யாமலையே இந்த முடிவை அறிவித்துள்ளது.
மாறாக, இந்த கண்டுபிடிப்பு கல்வித்தரம் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் அரசாங்க முதலீடு போன்ற அளவுகோல்களின் முழுமையான பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் அனைத்திலும் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருந்துள்ளது. இதனடிப்படையில் ஐரோப்பாவின் புத்தசாலி நாடு சுவிட்சர்லாந்த என்ற முடிவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.