உலக மேடையில் சுவிஸ் தமிழச்சி மனுஷா – உலக நடனப்போட்டியில் நான்காமிடம்!
பிரித்தானியாவின் பிர்மிங்க்ஹாம் நகரில் அண்மையில் நடைபெற்ற “Global Dance Open World Championship” உலகளாவிய நடனப்போட்டியில், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இளம் தமிழ் பெண்ணாகிய மனுஷா,பாரம்பரியமான சிவப்பு பரதநாட்டிய உடையில் பங்கேற்று, உலக அளவில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்!
இந்தப் போட்டியில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் தேர்வாக கலந்து கொண்டனர். அவர்களில் ஒரு சிறந்த கலைஞராக மனுஷா தன் பிரிவில் நான்காவது இடத்தை பெற்றதன் மூலம் தமிழரின் பண்பாட்டையும், சுவிஸ் நாட்டின் கலைதிறமையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

இது பற்றிய தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள மனுஷா குறிப்பிடுகையில்
❝**சுவிஸ் மேடையிலிருந்து பிரித்தானிய உலக அரங்கிற்கு நடந்த என் பயணம், என் உள்ளத்தில் என்றும் அழியாத நினைவாக இருக்கும்.**
> சுவிஸில் 🥇முதல் இடம், உலக அளவில் 🏅நான்காமிடம் – இது எண்களுக்கு மேல் ஒரு பெருமை.
> ஆயிரக்கணக்கான கலைஞர்களுக்கிடையில் நானும் ஒருவராக இருக்கின்றேன் என்பதே மிகப் பெரிய வெற்றி!❞ என குறிப்பிட்டுள்ளார்.
சூரிச் விமான நிலையத்தில் **பொலிஸ் அதிகாரியாக** பணியாற்றும் மனுஷா, பரதநாட்டியத்தை முறையாக கற்று தேர்ந்தவராக விளங்குகிறார். நடனக்கலை மீது “தீவிரமான காதல்”** கொண்ட ஒரு நடனவாதியாக, தன்னுடைய கலையின் மூலம் உலகம் முழுவதும் தமிழரின் கலாச்சாரத்தையும், பெண்களின் சாதனையையும் சிறப்பித்து வருகிறார்.
இந்த வெற்றி, அவரது உழைப்பு, பற்று மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த உலக அங்கீகாரம் என்பதில் சந்தேகமில்லை. மனுஷாவின் எதிர்கால முயற்சிகளை நோக்கி உறுதியுடன் நடைபோடவும் மேலும் வெற்றிகளை குவிக்கவும் SwissTamilMedia தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
@Theva MathaN