சுவிட்சர்லாந்தில் அரங்கம் நிரம்பி வழிந்த “வணக்கம் சுவிஸ்” தமிழர் நிகழ்வு.!! நேற்றைய தினம் சூரிச் வரசித்தி மகால் மண்டபத்தில் “வணக்கம் சுவிஸ் இரண்டாயிரத்து இருபத்து மூன்று” தமிழர் இசை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுவிஸ் சூப்பர் மெலோடிஸ் இசைக்குழுவின் இசையில் சுவிஸ் மற்றும் ஐரோப்பிய கலைஞர்கள் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். வேலா வரதனின் பிரதான அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழகத்தின் “சீ” தொலைக்காட்சி புகழ் பாடகிகளான பவதாயினி மற்றும் மாதுளானி சிறப்பு பாடகிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் பிரான்ஸ், யேர்மன் நாடுகளில் இருந்தும் எம் ஈழத்து கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தமை சிறப்பம்சமாகும். இன்னும் ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்து கொண்ட இந்தநிகழ்வில் இசை ரசிகர்களால் அரங்கம் நிரம்பி வழிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முதற்கட்டமாக, ஈழ விடுதலைப்பாடல்கள் உணர்பூர்மான பாடப்பட்டிருந்தமை பாராட்டத்தக்கவிடயம்.

அறிவிப்பாளர்களின் காந்தக்குரலோடு களைகட்டியிருந்த மேடையில் கலைஞர்களுக்கான கௌ ரவிப்பு மற்றும், சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது. இசைத்துறையில் பல்லாண்டுகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது கலைஞர்களுக்கு “ஈழமூச்சு” என்ற விருதுகளும் வழங்கி கௌ ரவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்வின் இரண்டாவது பகுதியாக தென்னிந்திய திரைப்பட பாடல்களுடன் மேடை சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என எமது கலைஞர்கள் பார்வையாளர்களை குதூகலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
