Swiss Post Finance வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! ஆன்லைனில் மோசடி செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது பழைய விடயமாக இருந்தாலும்இ தற்போதும் மோசடி நடந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் போஸ்ட்ஃபைனான்ஸ் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துபவர்கள் மீது இவ்வாறான போலியான மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபடுவர்களால் போஸ்ட்ஃபைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
அவ்வகை மோசடிக்கடிதங்கள் சரியான லோகோக்களுடன் உயர்தர காகிதத்தில் அச்சிடப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் அனுப்பும் கடிதங்களில் கியூ ஆர் குறியீடு உள்ளது. மற்றும் வாடிக்கையாளர் தங்கள் ஆன்லைன் கணக்கைப் பாதுகாக்க குறியீட்டை ஸ்கேன் செய்யும்படி சொல்கிறார்கள்.
இந்த குறியீடு ஒரு போலி இணையதளத்திற்கு இட்டுச் சென்று வாடிக்கையாளரின் ரகசியத் தகவலைச் சேகரிக்கிறது.
போஸ்ட் ஃபைனான்ஸ் மற்றும் காவல்துறை இந்த புதிய மோசடிமுறையைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகின்றனர்.
இவ்வாறான போலி கடிதங்களை பெறுபவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் கடிதத்தைப் பெற்றால்இ வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.