சுவிஸ் புதிய வார்ப்புகள் வழங்கும் இசை முரசு சீசன் 4 மார்ச் மாதம் 2ம் திகதி சுவிட்சர்லாந்தில் வெகு பிரமாண்டமான முறையில் இடம்பெற இருக்கின்றது. 50 மேற்மேட்ட ஐரோப்பிய மற்றும் இலங்கை இந்திய கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
பல்வேறு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்துகொள்ள இருப்பதோடு குறித்த நிகழ்வில் மேலைத்தேய கீழத்தேய நடனங்கள் மற்றும் பாட்டுக்குப்பாட்டு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றமை சிறப்பம்சமாகும்.
இதுமாத்திரமின்றி அதிஷ்டலாப சீட்டிழுப்பும் இடம்பெற இருக்கின்றது. சுவிசின் வின்டர்தூர் நகரில் குறித்த நிகழ்வு நாளை 02.03.2004 அன்று பகல் 12.00 மணி அளவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
இசைப்பிரியர்கள் அனைவரையும் வருகவருக என வரவேற்கிறார்கள் விழா குழுவினர்கள். குறித்த நிகழ்வுகளுக்கான ஊடக அனுசரணையாளர்களாக சுவிஸ்தமிழ்வானொலி, SwissTamilTv மற்றும் Swisstamil24 இணையம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.