மருத்துவக் காப்பீடு தொடர்பில் சுவிஸ் குடிமக்களுக்கு ஒரு செய்தி
சுவிட்சர்லாந்தில், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்கள் அதிகரிக்க உள்ளதாக ஃபெடரல் பொது சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு, சுவிஸ் குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் சராசரியாக 4.4 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.
அதன்படி, மாத காப்பீட்டு பிரீமியம் 393.30 சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரிக்க இருப்பதாக சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. பெரியவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் 18.50 சுவிஸ் ஃப்ராங்குகள், அதாவது, 4.1 சதவிகிதமும், இளைஞர்களுக்கான பிரீமியம் 13.30 சுவிஸ் ஃப்ராங்குகள், அதாவது, 4.2 சதவிகிதமும், சிறுவர்களுக்கான பிரீமியம் 5.70 சுவிஸ் ஃப்ராங்குகள், அதாவது, 4.9 சதவிகிதமும் அதிகரிக்க உள்ளன.
25 மாகாணங்கள் சுகாதார காப்பீட்டு பிரீமியங்களை குறைந்தபட்சம் 3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றாலும், சுக் மாகாணம் அவற்றை 14.7 சதவீதம் குறைக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.