சுவிஸ் மக்களுக்கு மின்கட்டணம் தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி
சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் மின்கட்டணம் குறைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில், அடுத்த ஆண்டில், அதாவது, 2026ஆம் ஆண்டில், மின்கட்டணம் சராசரியாக 4 சதவிகிதம் குறைய உள்ளது.
உதாரணமாக, 4,500kWh மின்சாரம் பயன்படுத்தும் குடும்பம் ஒன்றிற்கு, 58 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மிச்சமாக உள்ளது. ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த மின்கட்டணக் குறைப்பு, நகரத்துக்கு நகரம் மாறுபடும்.
La Chaux-de-Fonds (லா ஷோ-தி-ஃபோன்ஸ், Neuchâtel (நியுஷாட்டெல்) ,லவுசான், ப்ரீபோர்க், மத்திய வலைஸ்மற்றும் Vallée de Joux (வாலே தி ஜூ), ஜெனீவா, Jura (ஜூரா) மற்றும் Vaud (வெளட்) மாகாணத்தில் சில பகுதிகளில் மின்கட்டணம் குறைய உள்ளது. அதே நேரத்தில், Zermatt நகரிலோ மின்கட்டணம் 18 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.