சுவிஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் இறக்கை பகுதியில் நடனமாடிய விமான பணியாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
விமான பணியாளர்கள் இவ்வாறு நடனம் ஆடுவதும் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பது ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.
விமான பணியாளர்கள் நடனமாடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
விமான பணியாளர்கள் இவ்வாறு ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இவ்வாறான செயற்பாடுகள் ஆத்திரத்தையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக விமான சேவை நிறுவனத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் விமான சேவை தொடர்பிலான மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்து.
இவ்வாறு விமான இறக்கைகளில் நடனமாடிய விமான பணியாளர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எவரும் பணி நீக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source:- Tamilinfo