ஜெனீவா மாநில அரசு தேர்தல்: பச்சை கட்சி vs மக்கள் கட்சி நேரடி போட்டி
ஜெனீவா மாநில அரசில் காலியாக உள்ள ஒரு இடத்தை நிரப்பும் தேர்தல், இடது சாரி மற்றும் வலது சாரி கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதலாக மாறியுள்ளது. கடந்த வார இறுதி வாக்கெடுப்புக்குப் பிறகு, முன்னிலையில் உள்ள இரண்டு வேட்பாளர்கள் – பச்சை கட்சியின் வேட்பாளர் மற்றும் சுவிஸ் மக்கள் கட்சி (SVP) சார்ந்த வேட்பாளர் – இறுதி சுற்றில் மோதவுள்ளனர்.
மற்ற கட்சிகள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவ , அவை பின்வாங்கியுள்ளன. மத்திய வலதுசாரி சுதந்திரக் கட்சி (Liberal Party), தனது ஆதரவாளர்களை மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க அழைத்துள்ளது. அதேசமயம், பச்சை-சுதந்திரக் கட்சி (Green Liberals) எதிர்பார்த்தபடியே பச்சை கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அரசியல் விமர்சகர்கள், இந்த தேர்தல் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும் என்று ஒருமனதாக கருதுகின்றனர். இருப்பினும், வலதுசாரிக்கு சிறிய முன்னிலை இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. மக்கள் கட்சி வெற்றி பெற்றால், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்சிக்கு ஜெனீவா மாநில அரசில் மீண்டும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பது வரலாற்றுச் சிறப்பாக அமையும்.
இந்தத் தேர்தல் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.