சுவிஸ் தமிழ் வர்த்தகர்கள் – தொழில் முனைவோர் ஒன்றிணையும் மாபெரும் ஒன்றுகூடல்
சுவிஸ் தமிழ் வர்த்தகர்கள் – தொழில் முனைவோர் ஒன்றிணையும் விருந்து” சுவிஸ் நாட்டில் 30 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் வணிகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய “சுவிஸ் தமிழ் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் (STEDO)” கடந்த ஒரு வருடமாக சுவிஸ் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு இணங்க பதிவு செய்யப்பட்ட அமைப்பாக சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் தமிழ் வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கிடையிலான தொடர்பாடலை வலுப்படுத்தி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், எதிர்வரும் 9 ஆம் தேதி (09.11.2025), ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.00 மணி முதல், சிறப்பு இரவு விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. Im Grund 5, 5014 Gretzenbach, Switzerland எனும் விலாசத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் சுவிஸ் முழுவதும் இருந்து பல தமிழ் வணிகர்கள், தொழில் முனைவோர் மற்றும் இளம் வணிக முயற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். கருத்துப்பகிர்வு, நெட்வேர்க்கிங் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் ஈழத்தமிழர் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை திட்டமிடுகின்ற தொழில் முனைவோர் தொழில் துறை வல்லுநர்கள் குழு மற்றும் சிறு வணிக முயற்சியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நிறுவன வளர்ச்சியூடாக எமது எதிர்கால சந்ததிற்காக வலுவான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குவதே STEDOவின் நோக்கமாகும். இந்த முயற்சியின் மூலம் உலகம் முழுவதும் வாழும் தாயக தமிழ் வணிக மற்றும் தொழில் வல்லுநர்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பை உருவாக்கி பரஸ்பர வளர்ச்சி அறிவு பகிர்வு மற்றும் உலகளாவிய பொருளாதார பங்களிப்பை வலுப்படுத்துவோம்.