சுவிஸில் புத்தாண்டும் புது நிமிர்வும் – பிரமிக்க வைத்த தமிழர் நிகழ்வு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினமான நேற்று மாபெரும் இசை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
“புத்தாண்டும் புது நிமிர்வும்” என்ற இம் மாபெரும் நிகழ்வு இம்முறை 23 வது ஆண்டாக இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். சுவிஸ் சூரிச்சில் உள்ள டிட்டிகோன் என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளான சுவிஸ் மற்றும் ஐரோப்பிய தமிழர்கள் கலந்து தமது பேராதரவினை வழங்கியிருந்தார்கள்.
ஐரோப்பா வாழ் கலைஞர்கள் பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் சாரங்கி இசைக்குழுவின் இளம் இசைக்கலைஞர்கள் நேரடி இசை வழங்க, சன் சிங்கர் புகழ் விஐயன் உட்ப பல பரபல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், முன்னணி இசைக்கலைஞர்களின் இசைநிகழ்வுகள், பிரபல்யமான நடன ஆசிரியர்களின் பயிற்றுவிப்பில் மாணவிகளின் நடனங்கள் உட்பட, வாத்திய இசை என 100 க்கும் மேற்பட்ட ஈழத்து கலைஞர்களால் மேடை விழாக்கோலம் பூண்டிருந்தது.
மண்ணின் உணர்வோடும் ஈழத்து உறவுகளின் இசை ரசனையோடும் குறித்த நிகழ்வு அரங்கம் நிறைந்த வெற்றி விழாவாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.