சொலுத்தூர்ன் கன்டோனில் வீடு புகுந்த கொள்ளையர்கள் இருவர் கைது.!! கன்டோன் சொலுத்தூனில் நேற்று மாலை Zuchwil இல் Industriestrasse இல் உள்ள ஒரு வீடு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
ஜனவரி 2, 2024, செவ்வாய்கிழமை, மாலை 6:30 மணிக்கு சற்று முன், Zuchwil Industriestrasse இல் உள்ள வீடு உடைக்கப்படுவதாக சொலுத்தூர்ன் கன்டோனல் போலீசாருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், பல போலீஸ் ரோந்துகள் உடனடியாக சுச்வில் சென்று குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர். சிறிது நேரம் கழித்துஇ இனந்தெரியாத இரண்டு நபர்கள் வீட்டை விட்டு தப்பி ஓட முயன்றனர்.
உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 44 மற்றும் 46 வயதுடைய இரண்டு செர்பியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.