யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா ஓம்லிங்கமூர்த்தி அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா-அன்னபுரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்சிகா, விதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஜனின் அன்பு மாமனாரும்,
கிஷாந்தின் அன்பு பேரனும்,
ஓமேஷ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இராசரெத்தினம் மற்றும் கனகலிங்கம், மகாராணி ஆகியோரின் மைத்துனரும்,
இராசலிங்கம் (மீசை), வரதலட்சுமி ஆகியோரின் சகலனும்,
சிவசோதி-கலாநிதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கேரதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! தொடர்புகளுக்கு: +94 76 982 7213
- பிறந்த இடம்: யாழ். ஏழாலை
- வாழ்ந்த இடம்: புங்குடுதீவு