மரண அறிவித்தல்

தோற்றம்: 02/01/1938

மறைவு: 10/08/2025

Mrs. Thirunavukarasu Kanmani

வயது:
87

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான் மேற்கை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் – Basel Liestal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு கண்மணி அவர்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி (சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

ரவிச்சந்திரன் (கண்ணன்- சுவிஸ்) அவர்களின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, செல்வராணி (பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,

நைனிஷா (சுவிஸ்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லத்துரை, இரத்தினம், மனோன்மணி மற்றும் நாகராசா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினராசா, ஸ்ரீஸ்கந்தராசா- சாரதாதேவி மற்றும் தயாநிதி (இலங்கை), சீதாலெட்சுமி- செல்வரத்தினம் (கனடா), மகாலெட்சுமி, காலஞ்சென்ற மகேந்திரன் (இலங்கை), யோகலெட்சுமி-  கேமதாஸ் (நோர்வே), சிவசோதி – இராசகுமாரி (இலங்கை), நீதிராசா- அன்னசோதி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பாலசிங்கம், பூபதி, கருணைநாயகி, குலசேகரம்பிள்ளை மற்றும் கமலாம்பிகை (கனடா), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னம்மா, சரஸ்வதி, சேனாதிராசா மற்றும் பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, இராசம்மா, வைத்திலிங்கம், நடராசா, கணபதிப்பிள்ளை, மனோன்மணி, நாகரத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கஜந்தினி, சிந்துஜா, சைலஜா, சுவிகரன், சுவிசினி, விஜிதா, விஜிதன், சுஜிதா, சுஜிதன், சஜிதா, சஜிதன், கஜிதன், கஜீபன், மயூரன், லக்சன், மகிந்தன், சைலா, கிருஷா, டனுசன், டிவ்யா, டனுசிகா, வதுசிகா, டினோஜன், நிலக்ஸா, அட்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-08-2025 திங்கள், செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் பிற்பகல் 1:00 – 4:30 மணி வரை Hörnli Cemetery (Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 14-08-2025 வியாழக்கிழமை காலை 8:00 – 10:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

  • பிறந்த இடம்: யாழ். வேலணை
  • வாழ்ந்த இடம்: சுவிஸ்