Rapperswil பகுதியில் சற்றுமுன்னர்ஏற்பட்ட விபத்து : கார் ஓட்டிய 15 வயது சிறுவன்.! சென்ட்காலன் மாகாணம் Rapperswil பகுதியில் இன்று மாலை விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5, 2023), காலை 6 மணிக்கு முன்னதாக, (Neue Jonastrasse) நியூ ஜோனாஸ்ட்ராஸ்ஸுக்கு அருகிலுள்ள Unteren Bahnhofstrasse ஸில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. அதில் ஒரு காரை 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
Rapperswil பகுதியில் சற்றுமுன்னர்ஏற்பட்ட விபத்து
மேலும் அந்த காரில் பயணம் செய்த அவரது 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு பயணிகள் லேசான காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. விபத்தில் சிக்கிய மற்றைய காரை ஓட்டிச்சென்றவர் 31 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
காரை ஓட்டிச்சென்ற 15 வயது இளைஞன் உட்பட மற்ற சிறுவர்கள் விபத்து நடந்தவுடன் காரை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்கள், ஆனால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் விபத்து நடந்த இடத்திற்கு திரும்பினர்.
அப்போது, குறித்த 15 வயத சிறுவன் பெற்றோரின் காரை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து ஓட்டியமை தெரியவந்துள்ளது. கார்கள் சுமார் 48,000 பிராங்க் மதிப்புள்ள சொத்து சேதத்தை சந்தித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.