சுவிட்சர்லாந்தின் பீல் நகரில் பொலிகை ஜெயாவின் இரு நூல்கள் வெளியீடு
பேர்ன் கன்டோனிலுள்ள பீல் நகரில் எதிர்வரும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குஇ எழுத்தாளர் பொலிகை ஜெயாவின் இரண்டு புதிய நூல்கள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், ‘காற்றில் கரையும் செல்வானம்’ என்ற கவிதைத் தொகுப்பும், ‘மருவா நெறிப் பழமொழிகள்’ என்ற பழமொழித் தொகுப்பும் வாசகர்கள் முன் அறிமுகமாகின்றன.
ஏற்கனவே பொலிகை ஜெயா ‘எங்கே போகிறது எம் தேசம்’ என்ற கவிதை நூலையும்இ ‘பிறிகொடுத்த பின்னும் வாழத்துடிப்பவர்கள்’ என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார். மேலும், இவரது மூன்று நூல்கள் 2028ஆம் ஆண்டில் வெளிவர உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பால் பெயர் பெற்ற பொலிகை ஜெயா – எழுத்தாளர் மட்டுமன்றி,இ மேடைப் பேச்சாளர், பாடலாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகராகவும் அறியப்படுகிறார். சுவிஸைத் தலைமையிடமாகக் கொண்டு, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
அத்துடன்இ பல்வேறு வானொலிகளில் சங்க இலக்கிய பாடல்களை தொடர்ந்து வழங்கி வரும் இவர், வீரகேசரி, தினமுரசு, புதியுகம் போன்ற பத்திரிகைகளுக்கும், பல இலக்கிய இதழ்களுக்கும் தொடர்ந்து தமது கலைப்படைப்புகளை வழங்கி வருகிறார்..
இவரது இரு புதிய நூல்களின் வெளியீட்டை முன்னிட்டு, சுவிஸ் தமிழ்ச் சமூகத்தினர் அனைவருக்கும் அன்பான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலம்: 28.09.25 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 pm மணி.
இடம்: Calvin Hause, Mett strasse.154, 2504 Biel/Bienne.