சுவிட்சர்லாந்து ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.!!
நிட்வால்டன் (NW) கன்டோனில் உள்ள கெஹ்ர்சிடென் () அருகே, ஜூலை 28,காலை ஒரு சிறிய விமானம் வியர்வால்ட்ஸ்டாட்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
நிட்வால்டன் கன்டோன் காவல்துறையும், லூசேர்ன் காவல்துறையும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தின. காலை 9:45 மணியளவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கன்டோன்களில் இருந்து மீட்பு படைகள் அனுப்பப்பட்டதாக கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.
தேடுதல் பணிக்கு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. மேலும், விபத்தைத் தொடர்ந்து ஏரியில் கெரோசின் படலம் பரவியுள்ளதால், எண்ணெய் தடுப்பு வலை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம், பிலாத்துஸ் (Pilatus) நிறுவனத்தின் விமானமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. “flightradar24” தரவுகளின்படி, இந்த விமானம் நியூரம்பர்க் அருகே உள்ள பர்க் ஃபியூர்ஸ்டைன் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஏரியில் விழுந்தது.
இந்த விமானம் கடந்த சனிக்கிழமை டென்மார்க்கில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு வந்தது. அதற்கு முன், கனடாவில் இருந்து ஐஸ்லாந்து வழியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து பயணித்திருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
@Keystone SDA